அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் - துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்.

Update: 2021-01-13 08:27 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பபை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். பதவிநீக்கம் செய்வதற்கான 25-வது திருத்தத்தை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். தனது முடிவை பாராளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்