உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.77 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-01-17 01:26 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,49,21,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,77,57,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,51,34,404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,43,02,870, உயிரிழப்பு -  4,05,254, குணமடைந்தோர் -1,43,43,612
இந்தியா   -    பாதிப்பு- 1,05,58,710, உயிரிழப்பு -  1,52,311, குணமடைந்தோர் -1,01,96,184
பிரேசில்   -    பாதிப்பு - 84,56,705, உயிரிழப்பு -  2,09,350, குணமடைந்தோர் - 73,88.784
ரஷ்யா    -    பாதிப்பு - 35,44,623, உயிரிழப்பு -    65,085, குணமடைந்தோர் - 29,36,991
இங்கிலாந்து -  பாதிப்பு - 33,57,361, உயிரிழப்பு -    88,590, குணமடைந்தோர் - 15,19,106

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 28,94,347
துருக்கி - 23,80,665
இத்தாலி - 23,68,733
ஸ்பெயின் -22,52,164
ஜெர்மனி - 20,38,645
கொலம்பியா - 18,91,034
அர்ஜென்டினா - 17,91,979
மெக்சிகோ -16,09,735
போலந்து - 14,29,612
தென்ஆப்பிரிக்கா - 13,25,659

மேலும் செய்திகள்