உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-01-19 01:26 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,59,76,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,85,93,307 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 48 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,53,34,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,848 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,46,15,172, உயிரிழப்பு -  4,08,503, குணமடைந்தோர் -1,45,38,271
இந்தியா   -    பாதிப்பு- 1,05,82,647, உயிரிழப்பு -  1,52,593, குணமடைந்தோர் -1,02,27,852
பிரேசில்   -    பாதிப்பு - 85,12,238, உயிரிழப்பு -  2,10,328, குணமடைந்தோர் - 74,52,047
ரஷ்யா    -    பாதிப்பு - 35,91,066, உயிரிழப்பு -    66,037, குணமடைந்தோர் - 29,78,764
இங்கிலாந்து -  பாதிப்பு - 34,33,494, உயிரிழப்பு -    89,860, குணமடைந்தோர் - 15,46,575

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 29,14,725
துருக்கி - 23,92,963
இத்தாலி - 23,90,101
ஸ்பெயின் -23,36,451
ஜெர்மனி - 20,59,314
கொலம்பியா - 19,23,132
அர்ஜென்டினா - 18,07,428
மெக்சிகோ -16,41,428
போலந்து - 14,38,914
தென்ஆப்பிரிக்கா - 13,46,936

மேலும் செய்திகள்