அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2021-01-20 19:31 GMT
வாஷிங்டன், 

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வானார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது. அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

பதவியேற்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதியின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என்றும் தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் கமலா ஹாரிஸ் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், மக்களுக்கு சேவை செய்ய தயார் என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்