இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு; கோத்தபய ராஜபக்சே அமைத்தார்

இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை கோத்தபய ராஜபக்சே அமைத்தார்

Update: 2021-01-22 23:38 GMT
கொழும்பு, 

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அடுத்த மாதம் ஆய்வு செய்ய உள்ளது. இந்தநிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து முந்தைய இலங்கை அரசுகள் அமைத்த குழுக்களின் கண்டுபிடிப்புகளை ஆராய அதிபர் கோத்தபய ராஜபக்சே புதிய குழுவை அமைத்துள்ளார்.

அதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, போலீ்ஸ் துறை முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குழுக்களின் சிபாரிசுகளை அமல்படுத்த என்ன செய்யலாம் என்பதை பரிந்துரைக்குமாறு அக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்