இலங்கை சுகாதார மந்திரிக்கு கொரோனா

இலங்கையில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-23 18:39 GMT
கொழும்பு, 

தீவு நாடான இலங்கையில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 278 பேர் மரணமடைந்து உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கொரோனாவின் உச்சத்தை மேலும் உறுதி செய்யும் விதமாக, நாட்டின் சுகாதார மந்திரி பவித்ரா வன்னியராச்சிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சுகாதார மந்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் இலங்கை அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி பவித்ரா வன்னியராச்சி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2-வது மந்திரியும், 5-வது எம்.பி.யுமாவார்.

மேலும் செய்திகள்