கொரோனா அச்சுறுத்தல்: கனடா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-01-30 02:43 GMT
ஒட்டவா,

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.  இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர். 

அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனையை தங்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும். சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 

அப்படி நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர்” என்றார்.  அதேபோல், மெக்ஸிகோ, கரீபியன் நாடுகளுடனான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் கனடா அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்