அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வெற்றி சவுதி பெண் சமூக ஆர்வலர் ஹத்லுல் விடுதலைபெற உதவியது சகோதரி சொல்கிறார்

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தேர்தல் வெற்றி சவுதி பெண் சமூக ஆர்வலர் ஹத்லுல் விடுதலைபெற உதவியது, என அவரது சகோதரி கூறி உள்ளார்.

Update: 2021-02-12 16:50 GMT
Image courtesy : Reuters
ரியாத்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. வாகனம் ஓட்டக்கூடாது, படம் பார்க்கக்கூடாது, எப்பொழுதும் முகத்தையும் உடலையும் முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிந்திருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன. சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவந்தவர் சமூக ஆர்வலர்  லூஜின் அல் ஹத்லுல். அவர் 2018-ல் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.அவரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வேதச அளவில் கண்டனங்கள் எழுந்தன.இந்நிலையில், 1001 நாட்களுக்கு  பிறகு லூஜின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில், இளவரசர் முகமது பின் சல்மானின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்போது சவுதியில் பெண்கள் படம் பார்க்க, வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர்.இதில் இளம் பெண் சமூக ஆர்வலர் லூஜினுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

லூஜின் அல் ஹத்லுல்   கடந்த  புதன்கிழமை விடுவிக்கப்பட்டார், சிறையிலிருந்து வெளியே வந்தபின் அவர் தனக்கு 3  ஆண்டுகாலம்  சிறையில் தனக்கு  ஏற்பட்ட அனுபவங்களை  விவரித்தார். 3 ஆண்டுகள் சிறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பலரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார்.

முன்னதாக, மனித உரிமை வழக்கறிஞர் பரோனஸ் ஹெலினா கென்னடி ஒரு கடிதம் எழுதினார் அதில்  சவுதி அரேபியாவின் சிறையில் லூஜின் அல் ஹத்லால்.  பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .விசாரணையின் போது அவருக்கு ஆபாச படங்கள் காட்டப்பட்டு உள்ளது. சிறையில் இருந்த காலத்தில் பலமுறை தாக்கப்பட்டு, மின்சாரம் பாயச்சப்பட்டு உள்ளதாக கூறினார்.

லூஜின் அல் ஹத்லுல்.  குடும்பத்தினர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தேர்தல் வெற்றி ஹத்லுல் விடுதலையைப் பெற உதவியது, ஆனால் அவர் இன்னும் சுதந்திரமாக இல்லை என்று எச்சரித்தனர்.

"என் சகோதரியை விடுவிக்க நீங்கள் உதவியதற்கு அதிபருக்கு நன்றி கூறுவேன்" என்று லூஜின் அல் ஹத்லுல் சகோதரி ஆலியா அல்-ஹத்லூல்  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது பிடனின் வருகை என் சகோதரியின் விடுதலையில் நிறைய உதவியது மற்றும் பங்களித்தது என கூறினார்.

ஹத்லூலின் விடுதலை, இன்னும் பரிசோதனையில் உள்ளது மற்றும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,

மேலும் செய்திகள்