அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்தில் ரூ.73 கோடி ஊழல்; இந்திய என்ஜினீயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கொரோனா வைரசின் கோரப்பிடியில் அமெரிக்கா இன்றளவும் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா காலத்தில் சிறிய தொழில்களுக்கு உதவுவதற்காக கொரோனா நிவாரண திட்டம் கொண்டு வரப்பட்டது.

Update: 2021-02-13 09:57 GMT
இந்த திட்டத்தில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி, கள்ள கணக்குகள் காட்டி, ஊழல்கள் செய்து, அமெரிக்க வாழ் இந்திய என்ஜினீயரான சஷாங் ராய் (வயது 30) 10 மில்லியன் டாலருக்கு மேல் (சுமார் ரூ.73 கோடி) கடன்கள் வாங்க முயற்சித்தார்.

ஆனால் அவர் சிறு தொழில் நிர்வாகத்துக்கு அளித்த கள்ள கணக்குகள், தவறான நிதி அறிக்கைகள் அம்பலத்துக்கு வந்து விட்டன. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் சஷாங் ராய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்