அமைதி காப்பாளர்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் மாலி நாட்டில் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-02-14 00:10 GMT
நியூயார்க்,

ஐ.நா. அமைப்பின் மாலி நாட்டிற்கான ஒருங்கிணைந்த நிலை குழுவின் தற்காலிக இயக்க முகாம் ஒன்று கெரீனா நகரில் அமைக்கப்பட்டு இருந்தது.  இதன் மீது அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு கடந்த 10ந்தேதி தாக்குதல் நடத்தினர்.

இதில் அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  27 அமைதி காப்பாளர்கள் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து கொண்டதுடன், பாதிப்படைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்த தாக்குதல் ஒரு போர் குற்றம் என கூறிய கட்டிரஸ், தாக்குதலை நடத்திய ஒருவரையும் தப்பிக்க விட்டு விட கூடாது என மாலி அரசிடம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்