ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,447 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2021-02-18 23:10 GMT
மாஸ்கோ,
 
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்ய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,25,598 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ரஷ்யாவில் இதுவரை 36.61 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்