பிரேசிலில் புதிதாக 57,455 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,051 பேர் பலி

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2021-02-21 00:42 GMT
கோப்புப்படம்
ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் 57,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,01,39,148 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 1,051 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,46,006 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,67,939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,25,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்