இம்ரான்கானின் பாராளுமன்ற உரையை இலங்கை ரத்து செய்தது ஏன் ?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார்.

Update: 2021-02-22 10:49 GMT
கொழும்பு,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

மேலும் இம்ரான்கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள கொழும்பு கெசட் எனும் வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுடனான மோதலை தவிர்க்கும் வகையில் இம்ரான் கான் உரையை ரத்து செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பலாம் என்பதாலும் இதனால், இந்தியாவுடன் தேவையற்ற பகைமை சம்பாதிக்க நேரிடும் என்பதாலும் இலங்கை இந்த முடிவுக்கு வந்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இம்ரான் இதுபோன்ற பல தளங்களில்  காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்