இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பாக். பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.

Update: 2021-02-23 14:44 GMT
கொழும்பு,

இரண்டு நாள்கள்  அரசு முறைப்பயணமாக இலங்கைக்கு முதல் முறையாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சென்றுள்ளார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்  சென்றுள்ளனர். 

இலங்கை சென்ற இம்ரான் கான்,  அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

பாகிஸ்தான்  அமைச்சர்  ஷா மெகமூத் குரேஷி,   உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்தனர்.  பேச்சுவார்த்தைக்கு பின்  பின்னர் இரண்டு நாடுகளின் பிரதமர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  நாளை  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க உள்ளார்.

மேலும் செய்திகள்