இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

Update: 2021-02-23 16:34 GMT
Image courtesy : AP/PTI
லண்டன்

தெற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர், போரிஸ் ஜான்சன் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களைத் திறக்க தடுப்பூசி பாஸ்போர்டுகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க மறுஆய்வுக்கான திட்டங்களை வெளியிட்டார். 

தடுப்பூசி பாஸ்போர்டுகள் குறித்த ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறும். நாங்கள் மிக வேகமாக முடிவு எடுக்கிறோம் என்று சிலர் சொல்வார்கள், மற்றவர்கள் நாங்கள் மிக மெதுவாக செல்கிறோம் என்று கூறுவார்கள்.

சமநிலை சரியானது என்று நான் நினைக்கிறேன், இந்த இடைவெளி மாற்றங்களின் தாக்கத்தை அறிந்துக்கொள்ள எங்களுக்கு நேரம் தருகிறது. மக்கள்தொகையைச் சுற்றி ஒரு முழு கேடயத்தையும் உருவாக்கும் வழியை அறிவியல் நமக்கு வழங்கியுள்ளது. ஜூன் 21-ம் தேதிக்குள் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்