சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Update: 2021-02-26 03:06 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளை பாதுகாப்பதில் ஜோ பைடன் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த வான் தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஜான் கிர்பி கூறியுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி அமெரிக்க படைத்தளங்கள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த வான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்