உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-02-27 01:23 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.39 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,39,61,551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,95,22,675 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 28 ஆயிரத்து 101 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,10,775பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,059 (பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்