லடாக் மோதலில் சீன ராணுவத்தை வழிநடத்தியவருக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய பதவி

லடாக் மோதலில் சீன ராணுவத்தை வழிநடத்தியவருக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய பதவி

Update: 2021-03-02 11:36 GMT
லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக உரசல் போக்கு நீடித்து வந்தது.‌ இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பெரும் மோதலாக வெடித்தது. லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்கள் சரமாரியாக மோதிக்கொண்டனர். இந்த பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்திய எல்லையில் சீன படைகளுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை நாடாமன்ற குழுவின் இணைத் தலைவராக சீன அரசு நியமித்துள்ளது.

2017-ம் ஆண்டு டோக்லாம் எல்லையில் இந்திய ராணுவத்துடனான மோதலின் போதும், கடந்தாண்டு லடாக் எல்லையில் நடந்த சண்டையின் போதும் சீன படைகளுக்குத் தலைமை தாங்கியவர் மூத்த ராணுவ அதிகாரி ஜாவோ (வயது 65). அண்மையில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் சீன நாடாளுமன்றத்தின் செல்வாக்குமிக்க குழுவான வெளியுறவு விவகாரங்கள் குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.‌

மேலும் செய்திகள்