அமீரகத்தில், ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - புதிதாக 2,721 பேருக்கு தொற்று

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2021-03-02 18:05 GMT

அபுதாபி,

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 666 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 83 ஆயிரத்து 998 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 15 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 11 ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்