ஒரே காரில் 25 பேர் பயணம் டிரக் மோதி விபத்தில் 13 பேர் பலி

கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது, காரின் மீது டிரக் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-03-03 04:59 GMT
Image courtesy : Gina Ferazzi/Los Angeles Times
கலிபோர்னியா

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும்  அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற  கார் மீது  டிரக் ஒன்று மோதியது
இதில் 13 பேர் பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார் ட்டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிகிச்சையின் போது ஒருவர் உயிர் இழந்தார்.

மேலும் செய்திகள்