நியூசிலாந்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

நியூசிலாந்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-03-04 14:45 GMT
கோப்புப்படம்
ஆக்லாந்து (நியூசிலாந்து), 

நியூசிலாந்தின் ஆக்லாந்து அருகே வடக்கு தீவின் கரையோரத்தில் இன்று மாலை 7.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தின் மையப்பகுதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து கிழக்கு (இ) க்கு 414 கி.மீ தூரத்தில் இருந்தது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் பூகம்பம் மாலை 6:57 மணிக்கு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், இன்று உருவான நிலநடுக்கம் சுனாமியை உருவாக்குமா என்பதை இன்னும் மதிப்பிடுவதாகக் கூறி உள்ளது. மேலும் கடற்கரைக்கு அருகில் நீண்ட அல்லது வலுவான நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.


மேலும் செய்திகள்