மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 2 பேர் படுகாயம் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

அபுதாபி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

Update: 2021-03-07 23:44 GMT

அபுதாபி,

அபுதாபியில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் சம்பவத்தன்று 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக சென்ற மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபரை உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஷேக் சேக்புத் மருத்துவ நகர ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவருக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்