ஏமனில் தீ விபத்து: 8 பேர் பலி; 170 பேர் காயம்

ஏமன் நாட்டில் புலம்பெயர்ந்தோர் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-03-08 21:13 GMT
சனா,

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் பெரும் பகுதிகளை அவர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

ஏமன் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசு, சவுதி தலைமையிலான ராணுவ கூட்டணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சார்பிலான புலம்பெயர்ந்தோர் மையம் ஒன்று தலைநகர் சனாவில் உள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான சர்வதேச புலம்பெயர் அமைப்புக்கான மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கி கொண்டனர் என தெரிவித்து உள்ளது.

அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.  இந்நிலையில், இந்த தீ விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  170 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்களில் 90 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.

மேலும் செய்திகள்