ஈராக்கில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

ஈராக்கில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-09 09:10 GMT
பாக்தாத்,

ஈராக்கில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தன. இது தொடர்பாக அந்நாட்டு  அரசு தெரிவித்துள்ளதாவது: 

சமீபமாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் மார்ச் 09 முதல் மார்ச் 22 ம் தேதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. அதில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை ஊடரங்கு பிறப்பித்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்