உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.12 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.12 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2021-03-17 01:26 GMT
ஜெனீவா,

கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை வீசுவதால் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா தடுப்பூசி ஒரு பக்கம் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், தொற்று பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

இந்த  சூழலில், தற்போதைய நிலவரப்படி  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,12,18,504 கோடியாக உயர்ந்துள்ளது.  தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 631- ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,681,680- ஆக இருக்கிறது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 07 லட்சத்து 69 ஆயிரத்து 196- ஆக உள்ளது.சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்து 600-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்