வாராந்திர கொரோனா பாதிப்பு 10 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்

வாராந்திர கொரோனா பாதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-18 04:10 GMT
ஜெனீவா, 

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் வாராந்திர கொரோனா பாதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. பல வாரங்கள் தொடர்ந்து பாதிப்பு குறைந்த பிறகு, மறுபடியும் 3 வாரங்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் உலகளாவிய புதிய பாதிப்புகளில், உயிரிழப்புகளில் 80 சதவீதம் வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு 6 சதவீதம் கூடினாலும், இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்