பிரேசிலில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

Update: 2021-03-26 20:29 GMT
பிரேசிலியா, 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அந்த வகையில் அந்த நாட்டில் வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தரப்பில் ‘‘கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 158 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 20 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் நேற்று ஒருநாளில் மட்டும் 2,777 பேர் கொரோனாவால் உயிரிழந்ததன் மூலம் மொத்த பலி 3 லட்சத்து 3 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்