இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து ; ஆயிரகணக்கானவர்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆயிரகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Update: 2021-03-30 02:10 GMT
படம்: AP
ஜகார்தா

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து  காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு நெருப்பும், புகையும் வெளியாகின.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 912 பேர் வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்