கடந்த 3 நாட்களில் ஓமனில் 3,139 பேருக்கு கொரோனா 9 பேர் பலி

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-05 00:58 GMT

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 3 நாட்களில் மட்டும், 2 ஆயிரத்து 38 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில் 9 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,690 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 186 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்