இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Update: 2021-04-08 12:32 GMT
லண்டன்

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று அரசியல் தலைவர்களை சிறைபிடித்த மியான்மர் ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ராணுவத்தின் நடவடிக்கையை எதித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவருடைய  கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கான  மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் மின் ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.இதனைத்தொடர்ந்து மியான்மரின்  ராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தை விட்டு தன்னை வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், மேலும் இனி தான் நாட்டின் பிரதிநிதி இல்லை என்றும் தன்னிடம் கூறியதாக கியாவ் ஸ்வார் மின் தெரிவித்தார்.

கியாவ் ஸ்வார் மின் லண்டனில் உள்ள மியான்மர் தூதரக கட்டிடத்திற்கு வெளியே தெருவில் நின்றுக்கொண்டு லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்வுகளை லண்டனின் நடுவில் ஒரு வகையான அதிகாரத்தை கைப்பற்றும் செயல் இது என்று விவரித்த கியாவ் ஸ்வார் மின், இந்த வகையான அதிகாரத்தை கைப்பற்றும் செயல் ஒருபோதும் எடுபடப்போவதில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்