வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு மசாஜ் சென்டரில், இந்திய வாலிபர் மீது தாக்குதல்

சார்ஜாவின் அல் நக்தா பகுதியில் உள்ள மசாஜ் சென்டரின் விவரம் அடங்கிய தகவல் அட்டை ஒன்று சாலையில் கிடந்தது. இதை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். அவர்கள் வாலிபரின் ஆடைகளை கழட்ட சொல்லி வீடியோ எடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கு, ஏ.டி.எம்.

Update: 2021-04-14 11:20 GMT

சார்ஜா,

சார்ஜாவின் அல் நக்தா பகுதியில் உள்ள மசாஜ் சென்டரின் விவரம் அடங்கிய தகவல் அட்டை ஒன்று சாலையில் கிடந்தது. இதை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். அவர்கள் வாலிபரின் ஆடைகளை கழட்ட சொல்லி வீடியோ எடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் கொடுக்க மறுத்ததால் அவரை கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தரவில்லையெனில் ஆடைகளை கழட்டி எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் தவித்த வாலிபர் திடீரென அந்த கட்டிடத்தின் 4-வது மாடி பால்கனியில் இருந்து குதித்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வாலிபரை போலீசார் மீட்டு அல் காசிமி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்