ஏழைநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குகிறது நியூசிலாந்து

ஏழைநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நியூசிலாந்து அரசு ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.

Update: 2021-04-16 00:25 GMT
வில்லிங்டன்,

உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதற்காக உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. அமைப்புகள் இணைந்து ஹவி தடுப்பூசி கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளது. 

இந்த அமைப்பு மூலம் ஏழை நாடுகளில் உள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கும், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை ஏழைநாடுகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என ஐ.நா. , உலக சுகாதார அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.நா., மற்றும் உலகசுகாதார அமைப்பு இணைந்து மேற்கொள்ளும் ஏழைநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் ஹவி தடுப்பூசி அமைப்பிற்கு நியூசிலாந்து அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க உள்ளது. 

கோவாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் நேற்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமரின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்