உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2021-04-16 23:08 GMT
ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு  முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை தொடர்ந்து உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமாக போடப்பட்டு வருகிறது. 

எனினும், கொரோனாவின் உக்கிர தாண்டவமும் கட்டுக்கடங்கவில்லை.  உலக அளவில் கொரோனா பல கட்ட அலைகளை அடுத்து அடுத்து தாக்கி திணறடித்து வருகிறது. 

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. வோர்ல்டோ மீட்டர் வலைத்தள புள்ளி விவரங்களின் படி, கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரம்  பலியாகியுள்ளனர். 

மேலும் செய்திகள்