இந்தோனேசியா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

இந்தோனேசியாவில் சீன ஆதரவுடன் செயல்பட்டு வரும் மின் ஆலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-04-30 16:20 GMT
ஜகார்த்தா,

இந்தோனேசிய நாட்டின் சுமத்ரா தீவில் சீனாவின் ஆதரவுடன் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த மின் ஆலையில் பல தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இதற்கிடையில், சுமத்ரா தீவில் இன்று கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மின் ஆலை அமைந்துள்ள பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மின் ஆலையில் பணியில் இருந்த 9-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தொழிலாளர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைத்ததால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்