கொரோனாவை ஆயுதமாக்க 2015-ல் விவாதித்த சீனா? ஆஸ்திரேலிய இதழில் வெளியான செய்தியால் பரபரப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

Update: 2021-05-10 08:47 GMT
சிட்னி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் பரவி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் படாத பாடு பட்டு வருகின்றன. 

 உலகையே உலுக்கு இந்த வைரஸ் சீனாவின் ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. ஆனால் இவற்றை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் வார இதழ் இன்றில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2015- ஆம் ஆண்டே கொரோனா வைரசின்(சார்ஸ்) வகையை பயோ ஆயுதமாக பயன்படுத்த சீன விஞ்ஞானிகளும் சுகாதார நிபுணர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் இருந்தே உலக நாடுகளுக்கு கொரோனா பரவியிருப்பதால், ஆஸ்திரேலிய பத்திரிகையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்