ஐ.எஸ். அமைப்புடன் மோதல்: போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.

Update: 2021-05-22 01:32 GMT
வாஷிங்டன்,

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் என்ற பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது.  கடந்த 2009ம் ஆண்டு ஊடுருவலுக்கு பின்னர் தொடர்ந்து பல கொடூர தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறது.  அந்த அமைப்பின் தலைவராக அபுபக்கர் ஷேகாவ் செயல்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் கைகோர்த்து அந்த அமைப்பு புதிய பெயருடன் செயல்பட தொடங்கியது.  எனினும், இந்த அமைப்புக்கு புதிய தலைவரின் பெயரை ஐ.எஸ். அமைப்பு அறிவித்தது.  இதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதனால், ஷேகாவ் மீண்டும் போகோஹரம் அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.

இந்த நிலையில், சம்பீசா வன பகுதியில் திம்புக்து என்ற இடத்தில் அமைந்திருந்த ஷேகாவின் தளத்திற்குள் புகுந்து நூற்றுக்கணக்கான ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.  இதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க, உடலில் கட்டியிருந்த தற்கொலை வெடிகுண்டு கவசம் ஒன்றை வெடிக்க செய்து ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.

மேலும் செய்திகள்