ஆங் சாங் சூகி நலமுடன் உள்ளார் - மியான்மர் ராணுவ தளபதி அறிக்கை

மியான்மர் பிரதமர் ஆங் சாங் சூகி நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-23 00:26 GMT
நைபிடா,

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார். 

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆங் சாங் சூகியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், அந்த தகவலுக்கு மியான்மர் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மியான்மர் ராணுவ தளபதி மின் அங் ஹலிங் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆங் சாங் சூகி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் உள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்