இலங்கையில் இந்திய பயணிகளுக்கு தடை நீடிப்பு

இலங்கையில் இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-26 21:55 GMT
கொழும்பு,

இலங்கையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலயில், இலங்கையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, ஜூன் 1-ந் தேதி முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்திய பயணிகளுக்கும், இந்தியா வழியாக பயணிப்பவர்களுக்கும் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் எல்லா பயணிகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம், விமானங்களில் அதிகபட்சம் 75 பேர் மட்டும் பயணிக்கலாம். அவர்களும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்புதான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் இதுவரை 1.7 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1269 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்