பெல்ஜியத்தில் 41 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைப்பு

பெல்ஜியம் நாட்டில் ‘ஜான்சன்’ நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-05-27 04:26 GMT
இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 40 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணுக்கு ரத்தம் உறைதல், ரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. இறுதியில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, 41 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி போடுவதை பெல்ஜியம் அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அவசர அறிவுரை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடுப்பூசியை மீண்டும் போடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், 41 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணி நீடிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்