அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு

அமெரிக்காவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-05-31 09:26 GMT
அலாஸ்கா,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகருக்கு வடக்கே 74 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 12.29 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.  நிலநடுக்கம் 41.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  எனினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்