சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது.

Update: 2021-06-02 10:09 GMT
ஜெனிவா

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. 

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும் என கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி, அவசர கால பயன்பாட்டிற்கு சினோவாக் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு  உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி அந்த அமைப்பின் ஒப்புதலை பெறும்  சீனாவின்  2-வது கொரோனா தடுப்பூசியாகும்.  சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம், உலக நாடுகள், இந்த தடுப்பூசிக்கு  விரைவாக ஒப்புதல் அளிக்கவும் இறக்குமதி செய்து விநியோகிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்