சீனா: 480 கி.மீ. வழிமாறி வந்த களைப்பு - ஓய்வு எடுக்கும் யானைகள்

சீனாவில் உள்ள நகரத்திற்குள் 15 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளன.

Update: 2021-06-08 09:07 GMT
பீஜிங்,

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் யோனன் மாகாணம் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் அருகே அமைந்துள்ள அந்த மாகாணத்தின் ஹூன்னிங் நகரத்திற்குள் கடந்த 3-ம் தேதி 15 காட்டு யானைகள் தீடிரென நுழைந்தன.

அந்த காட்டு யானைகள் சீன நகரின் சாலைகள், வீடுகளில் சாதாரணமாக சுற்றித்து வருகின்றன. கடைகளில் கிடைக்கும் பழங்களை உணவாக உட்கொள்ளும் காட்டுயானைகள் பொதுமக்களை விரட்டியும் வருகிறது.

காட்டுயானை கூட்டம் வழக்கமான வனப்பகுதி செல்வதற்கு பதிலாக எதிர்திசையில் திசையில் 480 கிலோமீட்டர் தூரம் (300 மைல்கள்) பயணம் செய்து தவறுதலாக மக்கள் வசிக்கும் நகர்பகுதிக்குள் நுழைந்துள்ளது. 

இந்த காட்டு யானைகள் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தனது பயணத்தை தொடங்கி 480 கிலோமீட்டர்கள் பயணித்து ஹூன்னிங் நகரத்திற்குள் நுழைந்துள்ளன.

நகரங்களில் சுற்றித்திரியும் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியிலேயே திரும்பி விட வனத்துறையினர், போலீஸ் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு சாலைகளில் பயணிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவாக அன்னாசி பழங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகள் நடமாடுவதால் மக்கள் கவனமாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.     

இந்நிலையில், நகர்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் நகருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று ஓய்வு எடுக்கின்றன. தற்போது, காட்டுப்பகுதிக்குள் ஓய்வெடுக்கும் அந்த 15 யானைகளையும் டிரோன் கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

480 கிலோ மீட்டர் பயணம் செய்த களைப்பில் காட்டுப்பகுதிக்குள் யானைகள் வனப்பகுதிக்குள் ஒய்யாரமாக ஓய்வு எடுக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்