நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

உலகளாவிய பொருளாதார நிலை குறித்த தனது கணிப்புகளை உலக வங்கி வெளியிட்டது. அதில், இந்தியா குறித்து உலக வங்கி கூறியிருப்பதாவது:-

Update: 2021-06-08 16:18 GMT

கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இந்திய பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால், கொரோனா இரண்டாவது அலை, இந்தியா மீண்டு வருவதை பாதித்துள்ளது. உலக அளவில் இந்தியாவில்தான் கொரோனா இரண்டாவது அலை மோசமாக உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டுக்கான (2021-2022) இந்திய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.3 சதவீத வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இ்ந்தியா, 2022-2023 நிதியாண்டில் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2023-2024 நிதியாண்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும் எட்டும் என்று நினைக்கிறோம். அதுபோல், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்