இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க திட்டம்?

தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Update: 2021-06-13 00:52 GMT

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக்  கொரோனா இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருவதால், திட்டமிட்டபடி வரும் 21-ஆம் தேதி பொது முடக்கத் தளா்வுகளை அமல்படுத்துவதை 4 வாரங்களுக்குத் தள்ளிவைப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.  

ஊரடங்கு தளர்வுகளை ஜூலை 19 ஆம் தேதி முதல் அமல்படுத்தலாம் என்பது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலிப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் போரிஸ் ஜான்சனும்  இந்தத் தகவலை சூசகமாக வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,738- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்