நெதர்லாந்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு

வரும் 26 ஆம் தேதி முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-06-19 03:46 GMT
ஆம்ஸ்டெர்டாம்,

நெதர்லாந்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து, வரும் 26 ஆம் தேதி முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சமூக இடைவெளி 1.5 மீட்டர் பின்பற்ற வேண்டும் என்ற விதிகளை தவிர ஏனைய பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு பொறுப்பு பிரதமர் மார்க் ரட்டே தெரிவித்தார். 

வரும் 26 ஆம் தேதி முதல் அமலாக இருக்கும் ஊரடங்கு தளர்வுகளின் படி, எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது. கடைகளை மூடுவதற்கான நேரம் வரையறுக்கப்படாது.  மது பானத்திற்கு தடை இல்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை பரிசோதித்து இரவு நேர கிளப்கள் செயல்படலாம்.  இதேபோன்ற பரிசோதனைகளை செய்யும் கொரோனா செக் செயலியை பின்பற்றி தியேட்டர்கள், அருங்காட்சியகங்களில் கூடுதல் நபர்களை அனுமதிக்கலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்