ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; 14 பேர் கைது

லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

Update: 2021-06-22 05:55 GMT
Image courtesy bbc.com/PA MEDIA
லண்டன்

இங்கிலாந்தில்  தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த  ஒரு வாரத்தில் உயர்ந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த குளிர்காலத்தில்ஊரடங்கு  அறிவிக்க கூடும் என்று எச்சரித்ததை அடுத்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.

 கடந்த 24 மணி நேரத்தில் 10,633 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை பாதிப்பை விட  37.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும், நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.ஒரு முக்கிய அறிகுறியாக தடுப்பூசிகள் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு இடையிலான தொடர்பை உடைத்துவிட்டன

இங்கிலாந்தில்  டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து போரிஸ் ஜான்சன் அரசு ஜூலை 19-ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிய பொது மக்கள் மற்றும் போலீசார் சாலைகளில் கட்டி புரண்டு சண்டையிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது டென்னிஸ் பந்துகளை ஏறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்