பிரேசிலில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு பாதிப்பு

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உச்ச அளவை தொட்டுள்ளன.

Update: 2021-06-24 10:54 GMT


சாவோ பாவ்லோ,

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.  2வது இடத்தில் இந்தியா உள்ளது.  அதற்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடாக பிரேசில் உள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இது ஒரு நாளில் பதிவாகியுள்ள உச்சபட்ச எண்ணிக்கையாகும்.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 81 லட்சத்து 69 ஆயிரத்து 881 ஆக உயர்வடைந்து உள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இதே காலகட்டத்தில் கொரோனா பாதிப்புகளால் 2 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 7 ஆயிரத்து 109 ஆக உயர்வடைந்து காணப்படுகிறது.

மேலும் செய்திகள்