ஸ்பெயினில் முக கவசம் அணிய தேவையில்லை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Update: 2021-06-26 19:27 GMT
Photo Credit: AFP
மாட்ரிட், 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை அங்கு 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் பலனாக அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனையடுத்து அந்த நாட்டு அரசு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்பெயினில் பொதுவெளியில் முக கவசம் அணிவது கட்டாயம் என்கிற உத்தரவு நேற்று திரும்ப பெறப்பட்டது. அதாவது இனி அங்கு பொது வெளியில் மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை.  முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டாலும், பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணிந்து செல்வதையே அங்கு காண முடிகிறது.

மேலும் செய்திகள்