நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: சுவீடன் பிரதமர் ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த சுவீடன் பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2021-06-28 10:46 GMT


ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஸ்டெஃபான் லோஃவென்.  கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லோஃவென், அதன்பின்னர் கடந்த 2018ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். 

இந்நிலையில், கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் லோஃவென் தோல்வி அடைந்துள்ளார்.  இதனால், தேர்தல் அல்லது ராஜினாமா ஆகிய ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது நாட்டுக்கு சரியாக இருக்காது என கூறினார்.  இதுதவிர, சுவீடனில் ஓராண்டில் அடுத்த பொது தேர்தல் வரவுள்ளது.

இதனை முன்னிட்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.  இதனால், அவருக்கு பதிலாக வேறு யாரை பிரதமர் ஆக்குவது என்ற முடிவு நாடாளுமன்ற சபாநாயகரின் கையில் உள்ளது.



மேலும் செய்திகள்