ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகங்கள் மூடப்படுகிறதா?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விரைவில் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. இதனால், கடந்த சில வாரங்களில் அங்கு தலீபான் பயங்கரவாதிகளின் வன்முறை அதிகரித்துள்ளது.

Update: 2021-07-06 23:33 GMT
அதனால், ஆப்கானிஸ்தானுக்கு வரும் அல்லது தங்கி பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறும் இந்தியா கடந்த வாரம் கேட்டுக்கொண்டது. இந்தநிலையில், வன்முறையை கருத்திற் கொண்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு காபூலில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதில், ‘‘காபூலில் உள்ள இந்திய தூதரகம், காந்தகார், மசார் ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், காந்தகார், மசார் நகரங்களை சுற்றிலும் பாதுகாப்பு சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்